உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்

செங்கை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கும் பணி, நேற்று துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 952 பள்ளிகளில், 83,804 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும், 2ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, சமூக நலத்துறையின் வாயிலாக, பள்ளிகளுக்கே நேரில் சென்று அளவெடுத்து, சீருடைகள் தைக்கப்பட்டன.மாவட்டத்தில், 2024- - 25ம் கல்வியாண்டிற்கான முதல் இணை சீருடைகள் வழங்கும் பணியை, செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா, வனக்குழு தலைவர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, ஊராட்சி தலைவர் பரிமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மகளிர் தையற்தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நேரடியாக சென்று, மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை