உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அருகே தண்டலம் கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன், 62.இவர், கடந்த 6ம் தேதி, வீட்டை பூட்டிக்கொண்டு, வேட்டைக்காரன் கிராமத்தில் உள்ள அவரதுமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து,பீரோவில் இருந்த 8சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், திருடு போன வீட்டில் ஆய்வு செய்து, நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி