உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேரூர் ஆலை கற்கள் குவிப்பு மீனவர்கள் தடுத்ததால் பரபரப்பு

பேரூர் ஆலை கற்கள் குவிப்பு மீனவர்கள் தடுத்ததால் பரபரப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி பேரூர் பகுதியில், கடல்நீரிலிருந்து தினசரி 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.ஆலை வளாக பகுதியில் கடலரிப்பு ஏற்படாமல் தவிர்க்க, கடற்கரையிலிருந்து கடலுக்குள் பாறை கற்கள் குவிக்க கருதிய பேரூர் ஆலை ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை, லாரிகளில் பாறை கற்களை கொண்டுவந்து, கடற்கரையில் குவிக்கத் துவங்கினர்.இப்பகுதியை ஒட்டியுள்ள நெம்மேலி மீனவர் பகுதியில், ஏற்கனவே கடலரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஆலைக்காக குவிக்கும் கற்களால், மீனவ பகுதியில் கடல்நீர் மேலும் உட்புகுந்து பாதிப்பு ஏற்படும் என கருதிய மீனவர்கள், கற்களை கடற்கரையில் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ