மேலும் செய்திகள்
கிளி வாகனத்தில் கந்த பெருமான்
05-Mar-2025
திருப்போரூர், திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், கடந்த 3ல் மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை உத்சவங்கள் நடக்கின்றன. முக்கிய விழாவாக, 9ல் தேர் திருவிழா நடந்து முடிந்தது.நேற்று காலை, எட்டாம் நாள் பகல் உத்சவத்தில்கந்தப்பெருமான் தொட்டி உத்சவ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முகூர்த்தநாளான நேற்று திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்தில் நடந்தன.தொடர்ந்து, நாளை 12ம் தேதி, 10ம் நாள் உத்சவமாக தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.விழாவில், இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி, சரவண பொய்கையில் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வருவார்.இதற்காக, கோவில் சரவணபொய்கை குளத்தில் தகர பேரல், மரப்பலகை, சவுக்கு கட்டையால் தெப்பம் கட்டும் பணி நடக்கிறது.
05-Mar-2025