உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் அரங்கிற்குள் மழை

திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் அரங்கிற்குள் மழை

திருப்போரூர்:திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கிய பழைய கட்டடம்,கடந்த 2013 - -14ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.தரைதளம், மேல்தளம்என, தலா 763.6 ச.மீ., பரப்பளவிலும், போர்டிகோ 83.16 ச.மீ., பரப்பளவிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு தலைவர், கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டடத்தை, கடந்த 2015ம் ஆண்டு டிச., 28ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்.இந்நிலையில், மழை பெய்யும்போது கூட்ட அரங்கு அறையின் கூரையில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால், அந்த அறையில், மழைக்காலத்தில் கூட்டம் நடத்துவதற்கு இடையூறு ஏற்படுகிறது.கடைசியாக அங்கு நடந்த கூட்டு குடிநீர் திட்ட அமைதி கூட்டத்தின் போது, அரங்கு முழுதும் மழைநீர் ஒழுகி, மக்களும், அதிகாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை