உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மியாவாக்கி காடுகள் வளர்ப்பு படாளத்தில் மரம் நடும் விழா

மியாவாக்கி காடுகள் வளர்ப்பு படாளத்தில் மரம் நடும் விழா

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளத்தில், ஜப்பானின் 'மியாவாக்கி' முறையில் காடுகள் உருவாக்குவதற்காக, நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 20,000 மரக்கன்றுகள் நடுவதற்காக, படாளம் -- பூதுார் மாநில நெடுஞ்சாலையில், பாலாறு கரை ஓரம், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, 5 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.இதில், ஜப்பானின் 'மியாவாக்கி' முறையில் காடுகள் உருவாக்குவதற்காக, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், புங்கை, நாவல், பூவரசு, மகாகனி, வேம்பு, தேக்கு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட வகைகளில், 20,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தனியார் கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் தோஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தனர்.இதில், தன்னார்வ அமைப்பினர், துாய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை