உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இ.சி.ஆரில் மரங்கள் சாய்ப்பு அரசுக்கு தீர்ப்பாயம் நோட்டீஸ்

இ.சி.ஆரில் மரங்கள் சாய்ப்பு அரசுக்கு தீர்ப்பாயம் நோட்டீஸ்

சென்னை: பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசின் தலைமை செயலர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறைக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.திருவான்மியூர் முதல் அக்கரை வரை, கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அக்கரை பகுதிகளில், சாலை விரிவாக்க பணி நடக்கிறது.இதற்காக மரங்களை வெட்டி அகற்றாமல், மாற்று இடத்தில் நட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, வாகை, அசோகா, பாதாம், உதயம் உள்ளிட்ட 97 மரங்களின் கிளைகளை வெட்டி, வேருடன் எடுத்து, சோழிங்கநல்லுார், ராமன்தாங்கல் ஏரிக்கரையில் நடப்பட்டன.அதன்பின், தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள, 10க்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் வெட்டி சாய்த்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இது குறித்து, மே 6ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் உத்தரவிட்டதாவது:'தினமலர்' நாளிதழ் செய்தியின் நகலுடன், தமிழக அரசின் தலைமைச் செயலர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, சென்னை கலெக்டர், மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை, தீர்ப்பாயத்தின் உத்தரவு மீறப்பட்டது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.விசாரணையை, வரும் ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ