உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 8 கிலோ கஞ்சாவுடன் திருச்சி வாலிபர் கைது

8 கிலோ கஞ்சாவுடன் திருச்சி வாலிபர் கைது

சென்னை.பெரம்பூர், ராஜிவ்காந்தி நகர் வழியாக, ஐ.சி.எப்., போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பையுடன் இருந்த வாலிபரை போலீசார் அழைத்த போது, அங்கிருந்து அவர் தப்ப முயன்றார்.போலீசார் அவரை விரட்டி பிடித்து, ஐ.சி.எப்., போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.விசாரணையில், திருச்சி, புதுாரை சேர்ந்த நந்தகுமார், 24, என்பதும், அவரிடம் எட்டு கிலோ கஞ்சா இருப்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நந்தகுமாரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ