உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 50 கிலோ கஞ்சா பறிமுதல் லாரியுடன் இருவர் கைது

50 கிலோ கஞ்சா பறிமுதல் லாரியுடன் இருவர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் அனுமந்தன் மற்றும் பெரியாபாளையம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் சிவா மற்றும் போலீசார் நேற்று காலை 7:15 மணியளவில் ஒதிக்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் டி.என். 12.பி.டி. 2985 என்ற பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். லாரியில் சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன், 31, ஓட்டுனராகவும், திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த சுகுமார், 26, என்பவர் கிளீனராகவும் இருந்தனர். லாரியின் அடிப்பகுதியில் 'டூல்ஸ்' பெட்டியில் நான்கு துணிப்பைகளில் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய்.கைது செய்யப்பட்ட இருவரையும், திருவள்ளூர் மதுவிலக்கு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை