உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நலவாரியத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்களை பரிசீலனை செய்ததில், மாற்றுத்திறனாளிகள் இருவரின் குடும்பத்தினருக்கு, ஈமச்சடங்கிற்காக, தலா 17,000 ரூபாயும், இரண்டு பேர் குடும்பத்தினருக்கு, விபத்து மரண உதவித்தொகையாக, தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன.அதுமட்டுமின்றி, மூன்று பேருக்கு கல்வி உதவித்தொகையாக, தலா 8,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளாக, மொத்தம் 4.4 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்பின், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மேற்கண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை