உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அகிலி சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?

அகிலி சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?

அச்சிறுபாக்கம்:சோத்துப்பாக்கம் - வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அகிலி, மாத்துார் கிராமத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைஉள்ளது.இந்த சாலையை அகிலி, மாத்துார், முனியந்தாங்கள், கூடலுார், ஒரத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் பயன்படுத்திவருகின்றனர்.இந்நிலையில்,இச்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில்உள்ளது.விவசாய நிலங்களுக்கு குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்ல, சாலையை துண்டித்த பகுதிகளில், சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ