உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கத்தில் குப்பை தேக்கம் அகற்ற நடவடிக்கை எடுப்பரா?

ஊரப்பாக்கத்தில் குப்பை தேக்கம் அகற்ற நடவடிக்கை எடுப்பரா?

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் விரிவு ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பகுதிகளில் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில் முறையாக குப்பையை சேகரிக்க வருவதில்லை.இதனால், இப்பகுதி வாசிகள் குப்பை கழிவுகளை ஊரப்பாக்கம் பிரியா நகர் நுழைவாயில் ஆர்ச் பகுதியில் உள்ள சாலையோரமாக கொட்டி வருகின்றனர்.இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளில், கால்நடைகள் உணவு தேடுகின்றன. இதனால், குப்பை கழிவுகளை சாலையில் இழுத்து போடுகின்றன.இதனால், இந்த சாலை வழியே செல்லும் பகுதி வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் ஊராட்சி சார்பில் முறையாக குப்பையை சேகரிக்கவும், சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி