உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கீரல்வாடி கிராம சாலையில் தெருவிளக்கு அமைக்கப்படுமா?

கீரல்வாடி கிராம சாலையில் தெருவிளக்கு அமைக்கப்படுமா?

சித்தாமூர்:சித்தாமூர் அருகே கீரல்வாடி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் உள்ள சந்திப்பை, கீரல்வாடி கிராம மக்கள் பேருந்து நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர்.பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணியர் என, தினசரி நுாற்றுக்கணக்கானோர் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிராமத்திற்கு செல்லும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு தார் சாலை உள்ளது. கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில், பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி அமைக்கப்படவில்லை.இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷப்பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கிராமத்திற்குசெல்லும் சாலையில் தெரு விளக்குகள் அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீரல்வாடி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை