உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு கம்பி அமைக்கப்படுமா?

கந்தசுவாமி கோவில் குளத்தில் தடுப்பு கம்பி அமைக்கப்படுமா?

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை ஒட்டி, சரவணபொய்கை திருக்குளம் உள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என, குளத்தை சுற்றிலும், சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுச்சுவரை கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் இருப்பதுபோல் மேம்படுத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவரை கலைநயத்துடன் அழகுபடுத்தும் பணிகள், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.இதுஒரு புறம் இருக்க, ஏற்கனவே குளத்தின் உள்பகுதியில், கிழக்கு பக்கம் முழுதும் மற்றும் வடக்கு பக்கம் ஒரு பகுதி மட்டும் பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. ஆனால், மற்ற பகுதிகளில் அவ்வாறு அமைக்கப்படவில்லை.எனவே, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, குளத்தின் விடுபட்ட பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை