உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஆத்துார் சுங்கச்சாவடி அருகே, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில், நாள்தோறும் அப்பகுதிவாசிகளால் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது.இதனை தடுக்கும் வகையில், அரசு புறம்போக்கு நிலப் பாதுகாப்பு திட்டம் 2023- - 24ன் கீழ், நிலம் அளவீடு செய்யப்பட்டு, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.இதனால், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை