உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காய்ச்சல் பாதித்த பெண் மர்ம மரணம்

காய்ச்சல் பாதித்த பெண் மர்ம மரணம்

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் துர்கா தேவி, 18. இவர், தனியார் பால் விற்பனை கடையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது, திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, துர்கா தேவி வீட்டில் இருந்தபோது, உடல்நிலை மோசமானது. வீட்டில் இருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.வீட்டில், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, திருப்போரூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், துர்காதேவி ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை