உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் கபடி: செயின்ட் ஜோசப் சாம்பியன்

மகளிர் கபடி: செயின்ட் ஜோசப் சாம்பியன்

சென்னை: பெரம்பூரில் நடைபெற்ற மாநில கபடி போட்டியில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி வீராங்கனையர், 'சாம்பியன்' பட்டம் வென்றனர்.சென்னை, பெரம்பூரில் உள்ள அந்தோணியம்மாள் கபடி குழு சார்பில், மணிசேகர் நினைவு முதலாமாண்டு, மாநில அளவிலான கபடி போட்டி, பெரம்பூர், ஜமாலியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், இரு நாட்கள் நடந்தது. இரு பாலருக்குமான இப்போட்டியில், நேற்று முன்தினம் மகளிருக்கான போட்டிகள் நடந்தன. இதில் தமிழ்நாடு போலீஸ், செயின்ட் ஜோசப் கல்லுாரி, எம்.எஸ்.வி., விளையாட்டு குழு, ஆவடி இமாகுலேட் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றன,இதில், துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி வீராங்கனையர், முதல் சுற்று போட்டியில், எம்.எஸ்.வி., அணியை 44 - -17 என்ற கணக்கில் எளிதாக வென்றனர்.அடுத்து நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ஆவடி இமாகுலேட் அணியை, 37--13 என்ற கணக்கில் வீழ்த்திய செயின்ட் ஜோசப் அணி வீராங்கனையர், அரையிறுதி போட்டியில் வலுவான தமிழ்நாடு போலீஸ் அணியை, 36 - -29 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தனர்.இறுதிப் போட்டியில் பி.டி.கே., விளையாட்டு குழு அணியை எதிர்த்து களமிறங்கிய செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியினர், அந்த அணியை 37--25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை