மேலும் செய்திகள்
குடிநீர் கிணறு அமைக்க பூஞ்சேரி மக்கள் கோரிக்கை
10-Mar-2025
செய்யூர், செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் நான்கு குடிநீர் கிணறுகள் உள்ளன.கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, கிராம மக்களுக்கு குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.ஏரியின் நடுவே 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றின் சுற்றுச் சுவர் சேதமடைந்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்., மாதம் திடீரென இடிந்து தரைமட்டமானது.இதனால் மாரியம்மன் கோவில் தெரு, கன்னியம்மன் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.பின், ஊராட்சி நிர்வாகம் சார்பாக மற்ற மூன்று குடிநீர் கிணற்றில் இருந்து, இப்பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், புதிய குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையடுத்து தற்போது, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 19 லட்சத்தில், ஏரியின் நடுவே புதிய குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, கிணறு அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
10-Mar-2025