பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் நரசிம்மன், 70, ரவி, 45, மாட்டு வியாபாரிகள். ரவியின் தம்பி மகன் காமேஷ், 23. கடந்த 7ம் தேதி இரவு தன் பெரியப்பா ரவியை கத்தியால் குத்தினார். இதில் ரவி இறந்தார். தடுக்க முயன்ற நரசிம்மனுக்கு படுகாயம் ஏற்பட்டது.நரசிம்மனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் காமேஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஊரில் சுற்றி வந்தது தெரியவந்தது.இதையடுத்து சென்னேரி வனப்பகுதியில் பதுங்கி இருந்த காமேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.