மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், மல்லைத் தமிழ்ச் சங்கம் இயங்குகிறது. அதன் 14ம் ஆண்டு விழா, பெருந்தமிழன் ராசராசன் விருது வழங்கும் விழா, அதன் தலைவர் சத்யா, செயலர் பாஸ்கரன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க அயலகத் தொடர்புக் குழு தலைவர் ராஜேந்திரன், மலேசிய முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான சரவணன் ஆகியோருக்கு, அமைச்சர் அன்பரசன், பெருந்தமிழன் ராசராசன் விருது வழங்கி, ராஜேந்திரனின் 'மந்திர கணங்கள்' பயண நுாலை வெளியிட்டு பேசினார்.அவர் பேசியதாவது:நம் மாவட்டத்தில், தமிழ் மொழியை வளர்ப்பவராக, ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளார். சிலர் சில ஆண்டுகள் வரை, சங்கம் நடத்தி விட்டு விடுவர். சத்யா தொடர்ந்து நடத்துகிறார்.மலேசிய நாட்டினரை, இங்கு அழைத்து விழா நடத்துகிறார். சங்கத்தின் மூலம், பொருத்தமானவர்களுக்கே விருது வழங்கப்படுகிறது.வெளிநாட்டில் சிக்கிய தமிழரை மீட்டு, அவர்களுக்கு உதவ, தமிழக அரசு 1 கோடி ரூபாய் சுழல் நிதியாக அளித்துள்ளது.வெளிநாட்டுத் தமிழரின் குழந்தைகளுக்கு, தாய்மொழி தமிழை கற்பித்து, பண்பாட்டை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, 12 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.மந்திர கணங்கள், பயண நுாலாக மட்டுமே இன்றி, தமிழக கலை, நாகரிகம், கல்வி மேம்பாட்டிற்கு பாலமாக அமையும். மலேசிய நாட்டிற்கு செல்லாத எனக்கு, அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.