உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி, சண்முகா நகர், 10வது தெருவில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன், 45, இவர், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, குடும்பத்துடன் மனைவியின் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.இந்த நிலையில், நேற்று, அவரது வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு, அருகில் வசிக்கும் அவரது உறவினர், ராமசுப்பிரமணியத்திற்கு மொபைல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார்.ராமசுப்பிரமணியன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு அவரது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாய் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரிந்தது.இது குறித்து, அவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தியிருந்த. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து. திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை