புளியமரத்தில் மோதிய ஆம்னி பஸ் 2 சிறுமியர் உட்பட 13 பேர் காயம்
செங்கல்பட்டு:பட்டுக்கோட்டையில் இருந்து, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, கோயம்பேடு நோக்கி, நேற்று காலை தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.பேருந்தை, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், 35, என்பவர் ஓட்டினார். மாமல்லபுரம் -- செங்கல்பட்டு சாலையில், நெம்மேலி அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதி நின்றது.இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த தீட்சிதா, 13, எழிலரசி, 13, ஆகிய இரண்டு சிறுமியருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மொத்தமா, 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.காயமடைந்த இவர்களை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.