உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆறுபடை வீடு பள்ளியில் 25வது பட்டமளிப்பு விழா

ஆறுபடை வீடு பள்ளியில் 25வது பட்டமளிப்பு விழா

திருப்போரூர்: திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 25ம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. இதில், பள்ளி தாளாளர் ஜெகநாதன் மற்றும் மஞ்சுளா தேவி தலைமை வகித்தனர். செயலர் ஹரிபிரசாத் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை வி.ஐ.டி., பல்கலையின் இயக்குனர் சசிகுமார் பங்கேற்று, யு.கே.ஜி., மழலைகளுக்கு பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து, மாணவ - மாணவியரின் ஆடல், பாடல், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.இதில், பள்ளியின் டீன் ஆண்டனி ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேகர், முதல்வர் கலைச்செல்வி, மேலாளர் அஜித், உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி