உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  எழும்பூர் ரயில் நிலையத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்

 எழும்பூர் ரயில் நிலையத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில், இருவேறு இடங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில், 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயில் எழும்பூரில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், பெண் பயணியை விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது பையை பார்த்தபோது, எட்டு கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சரஸ்வதி, 56, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பறிமுதல் செய்த கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில், யாரும் உரிமை கோராத பேக்கில் திறந்து சோதனை நடத்தினர். அதில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளள, 19 கிலோ கஞ்சா இருந்தது. இதை பறிமுதல் செய்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை