உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடலுார் பெரிய ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு உழவு பணி செய்யப்பட்ட 28 ஏக்கர் மீட்பு

கூடலுார் பெரிய ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு உழவு பணி செய்யப்பட்ட 28 ஏக்கர் மீட்பு

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்டு, கூடலுார் ஊராட்சி உள்ளது. ஊராட்சி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.ஊராட்சி பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தடைபடுவதால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்டுத் தரக்கோரி, கிராம மக்கள் கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.இதையடுத்து, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜனிடம், கூடலுார் ஊராட்சி பெரிய ஏரி தாங்கல் நிலத்தில், உழவு பணி வாயிலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தார்.இதனால், சில தினங்களுக்கு முன், கலெக்டர் உத்தரவின்படி, கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட மேய்க்கால் புல எண்: 254/2, பெரிய ஏரி புல எண்: 239, சித்தேரி தாங்கல் புல எண்: 18, பெரிய தாங்கல் புல எண்: 253 மற்றும் கழனிப்பாக்கம் பெரிய ஏரி புல எண்: 25 ஆகிய பகுதிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில், பெரும்பாக்கம் குறுவட்ட நில அளவர் வாயிலாக, வருவாய்த் துறையினர் நில அளவைப் பணி மேற்கொணடனர்.அரசு புறம்போக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்று, பெரிய ஏரி தாங்கல் பகுதியில், சர்வே எண்: 253ல், 27.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்வதற்காக, உழவு பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.இது குறித்து தகவல் அறிந்து, அப்பகுதிக்குச் சென்ற பெரும்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் ஆகியோர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டனர்.பின், கூடலுார் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை விற்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை பலகை அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை