உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 33 பேருக்கு மனை பட்டா

செங்கையில் 33 பேருக்கு மனை பட்டா

செங்கல்பட்டு:திருப்போரூர் தாலுகாவில், அச்சரவாக்கம், தையூர் பகுதியைச் சேர்ந்த 33 ஆதிதிராவிடர்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சப்- - கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து, மேற்கண்ட பகுதியில், 33 பேர் வீடுகளுக்கு சென்று, சப்- - கலெக்டர் நாராயணசர்மா மற்றும் வருவாய்த் துறையினர், ஆய்வு செய்தனர்.ஆய்வுக்குபின், பட்டா வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பின், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், 33 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் வழங்கினார்.இதில், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ