மூதாட்டி கொலையில் 4 பேர் கைது
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள், 80, என்பவர், கடந்த 16ம் தேதி, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால், கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.அவர் அணிந்திருந்த, 1.5 சவரன் நகை திருடு போயிருந்தது. சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று நான்கு பேரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:நல்லாத்துாரைச் சேர்ந்த சச்சின் என்ற திவ்வியராஜ், 24, ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 19, பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, மூதாட்டியை நகைக்காக கொலை செய்துள்ளனர். கொலைக்கு வேறு காரணமில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.