உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

தாம்பரம்,:திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சுவர்ணம், 60. இவரது மகள் செல்வியுடன், தாம்பரம் அருகே மாடம்பாக்கம், மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, சில நாட்களுக்கு முன் வந்து தங்கியிருந்தார்.நேற்று, மகளுடன் அதே பகுதியில், சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், சுவர்ணம் அணிந்திருந்த, 7 சவரன் செயினை பறித்து சென்றார்.இதுகுறித்த புகாரின்படி, சேலையூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை