உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டு வாசலில் பதுங்கிய 10 அடி மலைப்பாம்பு

வீட்டு வாசலில் பதுங்கிய 10 அடி மலைப்பாம்பு

பம்மல்:பம்மலை அடுத்த பொழிச்சலுார், ஞானமணி நகரைச் சேர்ந்தவர் முருகன்.நேற்று முன்தினம் இரவு, 7:15 மணியளவில், இவரது வீட்டு வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகளுக்கு நடுவில், மலைப்பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், இது குறித்து, தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து, 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். மழை காரணமாக, அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து இந்த மலைப்பாம்பு வந்திருக்கலாம் என தெரிவித்தனர். பின், அந்த பாம்பை, தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை