உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாய் கடித்து 2 வயது குழந்தை காயம்

நாய் கடித்து 2 வயது குழந்தை காயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24வது வார்டுக்குட்பட்ட காந்தி நகர், வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் சங்கவி, 27. இவருக்கு, எவினேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம், எவினேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் எவினேஷின் முகத்தில் கடித்து குதறின. இதனால், குழந்தையின் முகம் முழுதும் காயமானது.குழந்தையின் அழுகுரல் கேட்டு, பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை மீட்டு, மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ