உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்ணீர் எடுக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து மூழ்கி பலி

தண்ணீர் எடுக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து மூழ்கி பலி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற சிறுவன், தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்..அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வேட்ராம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி என்பவரது மகன் மணிகண்டன், 15.சிறுவன், 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்தான்.நேற்று, தன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த, அவர்களுக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்க சென்றான்.அப்போது, வாளியில் தண்ணீர் எடுக்க, அங்குள்ள ஒரு விவசாய கிணற்றுக்குச் சென்றுள்ளான்.எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உள்ளான்.சிறுவன் நீண்ட நேரமாகியும் வராததால் அங்கிருந்தோர், அச்சிறுபாக்கம் போலீசார் மற்றும் அச்சிறுபாக்கம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் மணிகண்டனை தேடி, இறந்த நிலையில் மீட்டனர்.பின், அச்சிறுபாக்கம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை