மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
19-Sep-2024
மறைமலை நகர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த கவசநல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்துார் பகுதியை சேர்ந்த தன் நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவி, 48, என்பவருடன், செங்கல்பட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு, டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.ஸ்கூட்டியை ரவி ஓட்டினார். சிங்கபெருமாள்கோவிலை கடந்து, ஜி.எஸ்.டி., சாலையில் 10:15 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த இன்னோவா கார், ஸ்கூட்டி மீது மோதியது.இதில், சாலையில் விழுந்து படுகாயமடைந்த செந்தில்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். சக வாகன ஓட்டிகள், படுகாயமடைந்த ரவியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இன்னோவா கார் ஓட்டுனரான திருநீர்மலை பகுதியை சேர்ந்த பவித்ரன், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மணலி, சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 22; எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லுாரி, பிசியோதெரபி நான்காம் ஆண்டு மாணவர்.கல்லுாரி முடித்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நண்பர் நிதிஷ்குமாருடன் கே.டிஎம்., டியூக் பைக்கில், வீடு திரும்பினார். பைக்கை நிதிஷ்குமார் ஓட்ட, விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.புழல் அருகே மேம்பாலத்தில் வந்தபோது, வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இதில், மேம்பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர். இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக புழல் நகர்ப்புற சமுதாய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. நிதிஷ்குமார் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2024