உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு அனைத்து வசதியுடன் புது கட்டடம் அவசியம்

திருப்போரூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு அனைத்து வசதியுடன் புது கட்டடம் அவசியம்

திருப்போரூர், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் விசாலமான புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில், இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர, இதன் கட்டுப்பாட்டில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 ஊராட்சி, ஒரு பேரூராட்சிகளில் உள்ள 99 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில், 350 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அலுவலகத்திலிருந்து மாணவர்களுக்கு பாட புத்தகம், சீருடை, புத்தக பை, காலணி போன்றவை வழங்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாதாந்திர கூட்டம், ஆசிரியர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கு சம்பளம் வழங்குதல் போன்ற அனைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதற்கான பல ஆவணங்களும், இந்த அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இப்படிப்பட்ட கல்வித்துறையில் மிக முக்கியமாக செயல்படக்கூடிய அலுவலக கட்டடம், இந்த கட்டடம் பொலிவிழந்து சேதமடைந்து காணப்படுகிறது.கட்டடத்தின் பக்கவாட்டில் புதர் மண்டியும், கட்டடத்தின் மேல் செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் உள்ளது.இதன் கூரை, 30 ஆண்டுகளை கடந்து பழுதடைந்து, தரமற்ற நிலையில் உள்ளது. மழைக்காலத்தில், மழைநீர் கூரை வழியாக ஒழுகி, அங்குள்ள அலுவலக ஆவணங்கள், இருக்கைகள், கனிணி போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் நாசமாகின்றன.இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஆவணங்களை பாதுகாக்க, போதிய இடவசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 50 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பல்வேறு பணிகள் காரணமாக இந்த அலுவலகத்திற்கு வரும் போது, காத்திருக்க போதிய இடவசதி, கழிப்பறை வசதியும் இல்லாமல் தவிக்கின்றனர்.பல்வேறு கோரிக்கையடுத்து, முதற்கட்டமாக கட்டடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. ஆனால் நிரந்தர தீர்வாக, மாவட்ட நிர்வாகம் விரைவில், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய விசாலமான புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி