உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டு ஏரியில் மதகு அமைக்க வேண்டுகோள்

புதுப்பட்டு ஏரியில் மதகு அமைக்க வேண்டுகோள்

செய்யூர், : செய்யூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில், 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இதன் வாயிலாக, புதுப்பட்டு, மேலப்பட்டு, சிறுவங்குணம் ஆகிய கிராமங்களில் உள்ள, 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.கடந்த 2022ம் ஆண்டு, மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அப்போது, ஏரியின் மதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கரை உடைந்து, நீர் வெளியேறியது.பின், மரக்கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு, பொதுப்பணி துறையினர் வாயிலாக, ஏரிக்கரை சீரமைக்கப்பட்டது.ஏரிக்கரை உடைந்ததில், மதகுப்பகுதி முழுதும் சேதமடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வரை ஏரியில் புதிய மதகு அமைக்கப்படாததால், விவசாய நிலத்திற்கு பாசன வசதி இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் நலன் கருதி, புதிய மதகு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை