மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்
1 hour(s) ago
இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை
1 hour(s) ago
கிராம நிர்வாக அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும்
1 hour(s) ago
சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே கல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பனையடிவாக்கம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அங்கு, 25 சென்ட் அளவு கொண்ட கிராமத்தின் மயானம் வயல்வெளிக்கு நடுவே உள்ளது.மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், உடலை அடக்கம் செய்ய, தனி நபருக்கு சொந்தமான பயிரிடப்பட்டுள்ள வயல்வெளி வழியாக எடுத்து செல்லும் நிலை உள்ளது. அதனால், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானத்திற்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கிராமவாசி ஒருவர் கூறியதாவது:பனையடிவாக்கம் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு, பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. அதிகாரிகளிடம் சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.துறை சார்ந்த அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக, தனியாருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி, மயானத்திற்கு சாலை அமைக்க வேண்டும்.இல்லையெனில், கிராமத்தில் சாலை வசதி உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கண்டறிந்து, அதில் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago