மேலும் செய்திகள்
உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்
23-Sep-2024
கூவத்துார்:கூவத்துார் அடுத்த பெருந்துறவு பகுதியில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாட்டுப்படகு வாயிலாக கடலுக்கு சென்று மீன் பிடிப்பதே, இப்பகுதி வாசிகளின் பிரதான தொழில்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இங்கு வலைப்பின்னும் கூடம் மற்றும் வலை பாதுகாப்பு மையம் கட்டப்பட்டது. இதில், மீனவர்கள் தங்கள் வலைகளை பாதுகாப்பாக வைத்து வந்தனர்.நாளடைவில் பராமரிப்பின்றி வலை பாதுகாப்பு மையத்தின் மேல்தளம் பழுதடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்ததால், மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள வலைகள் சேதமடைவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மேலும், பலத்த காற்று வீசினால், வலைப்பின்னும் கூடத்தின் ஓடுகள் உடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வலை பாதுகாப்பு மையத்துடன் கூடிய புதிய மீன்வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23-Sep-2024