உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  எல்லையம்மன் கோவிலில் ரூ.20 லட்சத்தில் நிழற்குடை

 எல்லையம்மன் கோவிலில் ரூ.20 லட்சத்தில் நிழற்குடை

செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வெளியூர்களுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாமல் பயணியர் அவதிப்பட்டு வந்தனர். பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிழற்குடை அமைக்க வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மார்க்கத்தில் செய்யூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாயிலும், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாயிலும் என, 20 லட்சம் ரூபாயில் இருபுறங்களிலும் புதிய நிழற்குடை அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி