உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டவுன் பஸ் சக்கரம் ஏறி வாலிபர் பலி

டவுன் பஸ் சக்கரம் ஏறி வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்தவர் கோபி என்கிற பாலகிருஷ்ணன், 36. கூலித் தொழிலாளி. அவரையும், அவரின் தாயாரையும் நாய் கடித்ததால், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துமனையில், சிகிச்சை பெற்றனர்.மீண்டும் வீராபுரம் செல்ல, திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில், காலை 10:00 மணிக்கு காத்திருந்தனர்.செங்கல்பட்டிலிருந்து அமிஞ்சிகரை செல்லும் அரசு டவுன் பேருந்து வந்ததும், முன்புற படியில் தாயார் முதலில் ஏறியதைத் தொடர்ந்து, அதன்பின் கோபி ஏறியுள்ளார். அப்போது, திடீரென பேருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, பேருந்தில் இருந்து தவறி விழுந்த கோபியின் தலை மீது, பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. அதில், கோபி சம்பவ இடத்திலேயே பலியானார்.திருக்கழுக்குன்றம் போலீசார், கோபியின் உடலைக் கைப்பற்றி, அவரது சகோதரர் வேலு அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !