உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

செங்கல்பட்டு:திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ், 20. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், மஹாலட்சுமி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, திம்மாவரம் சின்ன தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தெருவில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குறுக்கே சென்றதால், ரமேஷ் இருசக்கர வாகனத்தில் பிரேக் பிடித்தார்.அப்போது, பைக் தடுமாறி சாலை தடுப்பில் மோதியது. இதில் கீழே விழுந்த ரமேஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வழியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை