உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டீ கடையில் ரகளை செய்த வாலிபர் கைது

டீ கடையில் ரகளை செய்த வாலிபர் கைது

ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் 24வது தெருவில் டீ கடை நடத்தி வருபவர் ரஷீத், 27. கடந்த 13ம் தேதி, இவரது கடைக்கு வந்த இருவர் தின்பண்டம் சாப்பிட்டு, டீ குடித்து விட்டு, சிகரெட் வாங்கியுள்ளனர்.பணம் கேட்ட போது, கத்தியைக் காட்டி மிரட்டி, கண்ணாடி பாட்டிலில் இருந்த பொருட்களை உடைத்துள்ளனர்.மக்கள் கூடியதும், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆதம்பாக்கம் போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.இதில், தாம்பரத்தைச் சேர்ந்த அருண், 20, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, அருணை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை