மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் நகை திருட்டு
2 hour(s) ago
ஊஞ்சல் உத்சவம்
2 hour(s) ago
வட மாநில வாலிபரை தாக்கி பணம் பறித்தவர் கைது
2 hour(s) ago
இன்று இனிதாக (நாள்/31/12/2025/புதன்)
2 hour(s) ago
செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பஜார் பகுதியில் அதிக அளவில் பல்வேறு கடைகள் உள்ளன. தேவராஜபுரம், சால்ட் காலனி, மேற்கு செய்யூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, செய்யூர் பஜார் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தினமும் ஏராளமானோர் பஜார் பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், இங்கு குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால், செய்யூர் பஜாருக்கு வரும் மக்கள், கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் பஜாரில் உள்ள பழைய காவல் நிலைய கட்டடம் உள்ள இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago