பொது கழன்று ஓடிய டிரைலர் டயர் நுாலிழையில் தப்பிய வாலிபர்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, நேற்று முன்தினம் டிராக்டர் ஒன்று, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.திம்மாவரம் அருகில் சென்ற போது, டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த டிரைலரின் வலதுபக்க டயர் கழற்று ஓடி, டிராக்டரின் முன்னே சாலையில் விழுந்தது.நல்வாய்ப்பாக அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், விபத்தில் சிக்காமல் தப்பினார்.தற்போது இந்த சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.