மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம்
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், பழைய பெருங்களத்துாரில், மண்டல அலுவலகத்தின் பின்புறத்தில், மாநகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, 200 பேர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் செலவில், கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.