உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - மாமல்லபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர் - மாமல்லபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே தண்டலம், வெங்கலேரி, ஆலத்துார், கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனுார், பூஞ்சேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.திருப்போரூரில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆலத்துாரில் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், பையனுாரில் கல்லுாரிகள் உள்ளன.மாமல்லபுரத்தில் சுற்றுலாத்தலம் உள்ளது.அதேபோல், திருப்போரூரிலிருந்து ஓ.எம்.ஆர்., சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, செங்கல்பட்டு சாலையில் உள்ள கல்வி நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், பொதுமக்கள் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் மீண்டும் திருப்போரூர் திரும்பி, திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் தடத்தில் செல்ல, போதிய பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மாலை, இரவு நேரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து, நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.எனவே, திருப்போரூர் -- மாமல்லபுரம் இடையே காலை, மாலை நேரத்தில் மட்டும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி