உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  விவசாய பணிகள் செங்கல்பட்டில் தீவிரம்

 விவசாய பணிகள் செங்கல்பட்டில் தீவிரம்

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு தாலுகாக்களில், 1.65 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் கத்தரி, வெண்டை, வாழை உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்படுகின்றன. செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள வில்லியம்பாக்கம், பாலுார், ஆத்துார், திருவடிசூலம், வளர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த மாதம் பெய்த மழை காரணமாக, விவசாய பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏர் உழுதல், வரப்பு அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல், நடவு செய்தல் உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை