உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம் ; திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த தாலுகா அலுவலகத்திற்கு ஆதார் சம்பந்தமான பிரச்னைகளுக்கு, சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் வருகின்றனர்.இங்கு புதிய ஆதார் பதிவு, திருத்தங்கள் உள்ளிட்டவற்றுக்காக வருவோரை, ஆதார் மைய ஊழியர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:இந்த மையத்தில் ஆதார் சேவை பெற, ஒரு நாளிற்கு, 30 டோக்கன் அளிக்கப்படுகிறது. அதை பெறுவதற்காக, காலை 8:00 மணிக்கே வந்து காத்திருக்கிறோம். ஆனால், காலை 10:30 மணிக்கு பிறகே திறக்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தும், ஊழியர் எங்களுக்கு டோக்கன் வழங்காமல், அவருக்கு வேண்டிய நபர்களுக்கு வழங்கி, டோக்கன் முடிந்து விட்டதாக கூறுகிறார். குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்தும், டோக்கன் பெற முடியாமல், மீண்டும் மீண்டும் வந்து அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை