உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு

நந்திவரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு

கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.இந்த பள்ளியில், கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை படித்த மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவியர் பங்கேற்று, தங்களின் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரத்தின் பேத்தியுமான பிரமு குட்டி பங்கேற்று சிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை