உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குழந்தை திருமணம் இல்லா ஊராட்சியாக ஆமூர் தேர்வு

குழந்தை திருமணம் இல்லா ஊராட்சியாக ஆமூர் தேர்வு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆமூர் ஊராட்சியில், கடந்த 9 ஆண்டுகளாக குழந்தை திருமணம் நடைபெறாமல் இருப்பதாக, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பில் கண்காணிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், குழந்தை திருமணம் இல்லாத ஊராட்சி என, ஆமூர் ஊராட்சியைஅறிவித்தார்.இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பெயர் பலகையை திறந்து வைத்தார். குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு கன்வினர் தேவன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை