மேலும் செய்திகள்
லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு
28-Sep-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில் கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், புதிதாக துவக்கப்பட்ட ஹெட் அன்ட் கன்ட்ரோல் என்ற தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தனியார் நிறுவனம் சார்பில் இந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்ட போது, நடராஜர் சிலையும், தலை இல்லாத பெண் தெய்வத்தின் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்படி வந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகளை எடுத்துச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், சுற்றியுள்ள கிராமங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28-Sep-2025