உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அங்கன்வாடி கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

 அங்கன்வாடி கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கூவத்துார்: கடலுார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியைச் சேர்ந்த வேப்பஞ்சேரி, கூனியாமேடு ஆகிய பகுதிகளில், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டடங்கள் சேதமடைந்ததால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். புதிய கட்டடம் கட்டுமாறு, தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் கட்டுமாறு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. அந்நிர்வாகம் பரிசீலித்து, தற்போது தலா 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டியது. இதையடுத்து, இந்த அங்கன்வாடி கட்டடங்களை, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி